Sunday, December 29, 2024
HomeSrilankaவரணிசுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பத்தர் பலி.

வரணிசுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பத்தர் பலி.

திருமணமாகி சில மாதங்களேயான ராஜ்குமார் விபத்தில் பலி

வரணிசுட்டிபுரம் பகுதியில் இரவு 12-00 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பத்தர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.


அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பத்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவைராளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற சமயம் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்தில் இவ் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் வடமராட்சி தேவைராளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் வயது 30 என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.


திருமணம் செய்து ஒரு வருடத்தில் இவ் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments