குவைத்தில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று செப்டம்பர் மாதம் வரை மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை அகற்ற அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தாலும், மீன்களின் விலை கணிசமாக அதிகரித்து, சந்தையில் ஏராளமான மீன்கள் கிடைப்பதே காணாமல் போய்விட்டது. குவைத்திகள் மற்றும் வெளிநாட்டினரால் விருப்பப்பட்டு வாங்கப்படுகின்றன.
மலிவான மாலன் மீன் தற்போது ஒரு கிலோகிராம் ஆறு தினார் வரை விலை உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்பு ஒரு தினார்க்கு 6 கிலோ வரை விலை போன மீன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மீன் மார்க்கெட்டில் அவற்றின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைச்சகத்தால் மீன்பிடிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பலர் சட்டப்பூர்வமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிக்க செல்கின்றனர்.
இவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் மீன் மார்க்கெட்டுக்கு வழங்கப்படாமல் நேரடியாக உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என மீனவர் சங்கத்தின் தலைவர் தாஹர் அல் சோயன் தெரிவித்துள்ளார். மீனவ தொழிலாளிகளுக்கு விசா வழங்குவதை உள்துறை அமைச்சகம் நிறுத்தியுள்ளதால், இத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார். மற்றொரு தீர்வாக குவைத்தின் எல்லைபுற கடலில் மீன்பிடிக்க வழி திறக்க வேண்டும். சீசன் காலத்தில் குவைத்தின் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது அனுமதிக்கப்படாது.
சீசன் முடிந்ததும் குவைத்தின் கடல் எல்லையை விட்டு வேறு இடங்களுக்குச் இந்த மீன்கள் செல்கிறது. இவை பிற நாட்டு மீனவர்களின் வலையில் சிக்கி மீண்டும் அதிக விலைக்கு குவைத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. மீன் சந்தையை ஊக்குவிக்கவும், அனைத்து மீன்களும் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.