ஒலுவில் துறைமுகத்தின் பிரதிபலிப்பு கடலரிப்பே தவிர மக்களுக்கு வேறு எதுவித பிரயோசனமும் இல்லை
அந்த துறைமுகத்தில் போடப்பட்டிருக்கும் பாரிய முண்டுக் கற்களால்தான் நிந்தவூர், மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசங்களின் கடற்கரைப் பகுதிகள் கடலரிப்புக்கு உள்ளாகி வருகிறது.
அந்த துறைமுகத்தில் போடப்பட்டிருக்கும் பாரிய முண்டுக் கற்களை அகற்றினால் மட்டுமே தற்போது நிந்தவூர், மாளிகைக்காடு ,சாய்ந்தமருது பிரதேசங்களின் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடலரிப்பை தடுக்க முடியும்.
அப்படி இல்லாவிட்டால் அது ஒரு போதும் முடியவே முடியாது.
ஒலுவில் துறைமுகத்தின் மூலமாக கிடைக்கும் நன்மைகளை விட நிந்தவூர்,மாளிகைக்காடு ,சாய்ந்தமருது கரையோரப் பிரதேச மக்கள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்பதை அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மக்களுக்கு ஒலுவிலில் துறைமுகம் என்ற ஆசை காட்டி வாக்குகளை பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடலரிப்பின் உக்கிரத்தைப் படங்களில் காணலாம்.