உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டம் சிப்ரிபஜார் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது.
நேற்று இரவு இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் சிக்கி கொண்ட இன்சூரன்சு நிறுவனத்தை சேர்ந்த உதவி பெண் மேலாளர் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 3 மாடி கட்டிடமும் தீயில் கடுமையான சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.