கனடாவில் குடியுரிமை பரீட்சையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் நடைபெற்ற குடியுரிமை குறித்த பரீட்சையில் சுமார் 92 வீதமானவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
119053 பேர் இந்த ஆண்டில் குடியுரிமைக்கான பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
இதில் அதிகளவான குடியேறிகள் சித்தி எய்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா நாள் நிகழ்வுகளின் போது சுமார் 1130 பேர் கனடிய பிரஜைகளாக சத்திப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டிலும் பரீட்சைக்குத் தோற்றிய 91 வீதமானவர்கள் இந்த பரீட்சையில் சித்தி எய்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.