Home World US News அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு!

0

அமெரிக்கா – மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இடம்பெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version