இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம்,மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும்கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வவல்லமை மிகுந்த எண்ணாக உள்ளது!
இவர்களது பேச்சில் உண்மை,நேர்மையான வார்தைகள் மிகுந்திருக்கும் 7-ம்எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும்,வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும்.
ஆனால் நடுவயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும்கொடுத்துவிடும்.
இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்தபணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத்திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதைஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.
இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும்.தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள்.இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும்.உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ)ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த7-ம் எண்ணில் பிறந்தவர்களே!
7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள்!