மெக்சிகோ நாட்டில் உள்ள ஒக்சாகா பகுதியில் மேயர் 7 வயது கொண்ட முதலையை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முதலைக்கு பெண்போல வேடமிட்டு அவரை பெண்ணாக பாவித்து திருமணம் செய்ததுடன் திருமணம் முடிந்து முத்தமும் கொடுத்துள்ளார்.
மேலும் பாரம்பரியமாக இந்த திருமணம் நடத்தப்படுவதாகவும், இதன் மூலமாக மக்கள் கடவுளுடன் இணைக்கப்படுவதாக அங்குள்ள ஒக்சாகா மக்கள் நம்புகின்றனராம்.
அத்துடன் அசம்பாவிதம் எதும் நடக்கக்கூடாது என்பதற்காக முதலையின் வாய் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.