கிண்ணியா தம்பலகாம எல்லைப்பகுதியில் சிவத்தப்பாலம் அருகில் நேற்று பி.ப. 6.10 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பெற்றோருடன் பயணம் செய்த 2 சிறு குழந்தைகளில் 4 வயதுடை சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளானவர்கள் தம்பலகாமம் அரபா நகரைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விபத்தில் உயிரிழந்த சிறுமி தூக்க கலக்கத்தில் கீழே விழ நேரிட்டபோது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பிடிக்க முயன்று முன்னாள் உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.