ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் உள்ள மசூதிக்கு வெளியே புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை நேற்றுமுன்தினம்(29) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்தக் கொண்டாட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொதிப்படைய செய்யும்படியான ஒரு நிகழ்வு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அரங்கேறி உள்ளது.
அந்த நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் வெளியே, முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் பக்கங்களை ஒரு நபர் கிழித்து போட்டதுடன் அவற்றை தீயிட்டு எரிக்கவும் செய்தார்.
இந்த சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கமும் கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் நேற்றுமுன்தினம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
ஸ்வீடனில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது இஸ்லாத்தின் புனித நூலான திருக்குர்ஆன் மசூதிக்கு வெளியே வைத்து எரிக்கப்பட்டதை இலங்கை கண்டிக்கின்றது.
கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவது, இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளதுடன் மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் மதத்தின் அடிப்படையிலான பிளவுகள் மற்றும் வெறுப்பினை உருவாக்க உரிமம் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அனைத்து நாடுகள் மற்றும் தனிநபர்கள் துருவமுனைப்புக்குகளிற்கு, தேசிய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நலனுக்காக சமூகங்களின் மத்தியில் மத சகிப்பின்மை மற்றும் வெறுப்பு செயல்களைத் தடுக்க வேண்டிய கடமை உள்ளது” – என்றுள்ளது.