கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு அரச பணியாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் 3 பேர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இரண்டு அரச பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அனுமதிப் பத்திரத்தைப் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அநுராதபுரம் பிரதேச செயலக உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக எழுதுவினைஞர் ஆகியோரே கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.