Home Cinema ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்படாத 5 வெற்றி இயக்குனர்கள்..

ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்படாத 5 வெற்றி இயக்குனர்கள்..

0

அக்கால முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இரு ஜாம்பவான்களான கமல் மற்றும் ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏராளம்.

இந்நிலையில் பல ஹீரோக்களை வைத்து வெற்றி கண்ட இயக்குனர்கள், சூப்பர் ஸ்டார் ஆன ரஜினியை நிராகரித்ததும், அவரை வைத்து படம் எடுக்க ஆசைப்படாத 5 வெற்றி இயக்குனர்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

பன்முகத் திறமை கொண்ட இவர் இயக்கத்தில் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றி கண்டிருக்கின்றன. இவர் தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா போன்ற படங்களில், கமல் நடிப்பில் வெற்றி கண்டார். மேலும் குறிப்பாக ரஜினியை வைத்து எந்த ஒரு படமும் இவர் இயக்க ஆசைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி என் ரங்கநாதன்: வணிக ரீதியான பிரச்சனையை சந்தித்தபோது இவர் இயக்கத்தில் வெளிவந்த மகராசன் படத்தில் கமல், சம்பளம் எதுவும் பெறாமல் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு இவர் கமலை வைத்து மேற்கொண்ட படங்கள் ஆன கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா தொடர்வெற்றியை தேடி தந்ததன் பொருட்டு, ரஜினியை வைத்து இவர் எந்த ஒரு படமும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான மணிவண்ணன் ரஜினியின் படங்களால் ஈர்க்கப்பட்டு இவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு உள்ளார். அவ்வாறு இவர்கள் இருவரின் கூட்டணியில் கொடி பறக்குது என்னும் படம் எடுக்க முடிவானது. இந்நிலையில் சக நண்பர்களின் பேச்சுக்கு இணங்க ஏற்பட்ட பிரச்சனையால் இருவரிடையே சிறு மன கசப்பு ஏற்பட்டதால் அப்படம் தடைப்பட்டது. அதன்பின் இவர் இயக்கத்தில் ரஜினி எந்த படமும் நடிக்கவில்லை, இருப்பினும் இவர்கள் இருவரும் இணைந்து படையப்பா படத்தில் நடித்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ஆர்கே செல்வமணி: இவர் இயக்கத்தில் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில் கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி, செம்பருத்தி, அதிரடி படை ஆகியவை இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. மேலும் இவர் தமிழ் சினிமா சங்கத்தின் பிரசிடெண்டாக இருந்தபோது ரஜினியின் தர்பார் பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரஜினி மீது சில மனக்கசப்பு ஏற்பட்டது. இருப்பினும் இவர்கள் கூட்டணியில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து போன்ற எண்ணற்ற படங்களில் வெற்றி கண்ட இவர் ரஜினியை வைத்து படம் எடுக்காத காரணம் என்னவென்றால், இவர் படத்தில் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தான். ரஜினி மாஸ் ஹீரோ என்பதால் மக்கள் இவரின் சண்டை காட்சிகள் மற்றும் இவரின் ஸ்டைலை பார்ப்பதற்காகவே திரையரங்கம் வருவார்கள் இந்நிலையில் இவர் இது போன்ற காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் இவர் படங்களை நிராகரித்துள்ளார் ரஜினி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version