யாழ்பாணமிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரிந்து தீக்கிரையாகியுள்ளது
யாழ்பாணத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான Eswaran express 87 என்ற அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் பேருந்தில் 43 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது
பஸ்ஸினது இயந்திரப்பகுதி அதிக சூடடைந்தமையே இந்த தீப்பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என மதுரங்குளி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.