லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழந்தார்.
கிளிநொச்ஹி, பளை — இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது – 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.
எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.