யாழ்ப்பாணம் கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியை அண்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளிபகுதியில் இன்றையதினம் (29) வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்திருந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.
.
இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.