Home Srilanka Sports பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்குப் பெருமை புஷாந்தன்!

பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்குப் பெருமை புஷாந்தன்!

0

ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் பல போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியிலும் பங்கேற்று சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version