Home India சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம்- பொதுநல வழக்கு தாக்கல்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம்- பொதுநல வழக்கு தாக்கல்.

0

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “7 முதல் 10 பேர் வரை மட்டும் சாமி தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என்றும் தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version