Saturday, December 28, 2024
HomeSrilankaகிளிநொச்சி உதயநகர் துப்பாக்கி சூட்டு சம்பவம் - இருவர் கைது !!!

கிளிநொச்சி உதயநகர் துப்பாக்கி சூட்டு சம்பவம் – இருவர் கைது !!!

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு காரில் பயணித்தவர் மீது , மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதில் காரில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் திருநகர் பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து , துப்பாக்கி சூடு நடத்த பயன்படுத்திய உள்ளூர் துப்பாக்கியையும் , துப்பாக்கி பிரயோகம் செய்வதற்காக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் ,கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments