தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்குள்ள முருகன் கோவிலில் தரிசனம் செய்த அண்ணாமலை, லண்டனில் வாழும் தமிழர்களை சந்தித்துப் பேசினார்.
மேலும், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார்.
லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர்.