குளிர்ந்த மனம் கொண்டவர். இரக்க மனமும், தண்ணீர் போல ஈரம் உள்ள நெஞ்சினர். நீர் பிறர் உயிரை காப்பது போல் சமயத்தில் பிறருக்கு உதவி செய்து காப்பர். இவரின் அமைதி குணம் பல சாதனைகளை செய்ய தூண்டும். பிடிவாதம் சற்று அதிகமாகவே இருக்கும். மனதில் அச்சமும், குழப்பமும் ஏற்படும்.
இவர்கள் பேச்சு திறன் அதிகம் கொண்டவராக இருப்பர். தெய்வ பக்தி சாத்திர நம்பிக்கையும் பொது நலத்தில் அதிக ஈடுபாடும் உடையவராக இருப்பார்கள். மன உறுதியும், தந்திரமாக காரியங்களை சாதித்துக் கொள்ளும் திறமையும் இருக்கும். இவர்கள் அடிக்கடி தமக்கு ஆறுதல் கூறுவதையும், புகழுவதையும் விரும்ப மாட்டார்.
2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள்..,