Saturday, December 28, 2024
HomeSrilankaயாழ்ப்பாணத்தில் வீடொன்றின் வேலியில் இப்படியும் ஒரு அறிவித்தல்: பொதுமக்கள் அச்சம்.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் வேலியில் இப்படியும் ஒரு அறிவித்தல்: பொதுமக்கள் அச்சம்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவர், வித்தியாசமான பதாதையொன்றை தனது வீட்டின் முன் வைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பைத் தனது வீட்டின் முன்னால் பதாதையொன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபரின் வீட்டு பகுதியின் வீதியோரமாகப் பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளதால் தினமும் பல அசௌகரியங்களுக்கு வீட்டு உரிமையாளர் முகம் கொடுத்து வந்துள்ளார்.

வீதிகளில் குப்பை போட வேண்டாம்
இதனால் பொறுமை இழந்த குறித்த நபர் பொம்மை ஒன்றையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி, ” சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” எனப் பதாகை எழுதிக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments