தாவணகெரே டவுன் ஜாலிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் (வயது25). ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆசிப்பிற்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில், ஆசிப் சவாரிக்காக அமராவதி காலனிக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையின் வளைவில் டிரைவர் ஆட்டோவை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
14 பேர் கைது இதில், ஆசிப் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆசிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில்,நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தாவணகெரே போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.