Home Srilanka Politics தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தலைவர்கள்!

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தலைவர்கள்!

0

“தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள். இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய தமிழ் மக்கள் சார்ந்த கருத்துக்களை இவர்கள் தம் அரசியல் இலாபங்களுக்காக மறுக்கின்றார்கள்.”

  • இவ்வாறு தெரிவித்தார் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க.

இலண்டனில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பருக்கு வழங்கிய கேள்வி – பதில் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் பொய் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு, காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் கூறிய கருத்து வீதம் உண்மையானது.

தமிழ் எம்.பிக்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில்தான் அந்தத் தகவல்களை இலண்டனில் கூறினார் ஜனாதிபதி ரணில். ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக இதனை மறுக்கின்றார்கள்.

அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள். இது தமிழ் மக்களுக்கும் தெரியும்.” – என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version