அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை விசாரிக்க முடியவில்லை. ஆகவே, மீண்டும் காவலில் எடுத்து அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.