ஹராரே: உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் ஹராரேவில் இன்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்னில் வெளியேறினர். ரியான் பர்ல் 50 ரன்னிலும், எர்வின் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.