Home World ரஷியாவின் ரோஸ்டோவ் நகர ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிய வாக்னர் படைகள்.

ரஷியாவின் ரோஸ்டோவ் நகர ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிய வாக்னர் படைகள்.

0

உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ரஷிய ராணுவ மந்திரியை நீக்க வலியுறுத்தி இந்த கிளர்ச்சியை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. வாக்னர் படைகள் ரோஸ்டோன் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தலைமையகத்தில் இருந்தபடி வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் தனது படைகள் விமானத் தளம் உட்பட நகரத்தில் ராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக கூறி உள்ளார். நகரின் முக்கிய தெருக்களில் டாங்கிகள் உட்பட ராணுவ வாகனங்கள் நிறுத்தத்ப்பட்டிருப்பதையும், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதையும் உறுதி செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

வாக்னர் கூலிப்படையினர் ரஷியாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் இரு படைகளும் நெருங்கும் சமயத்தில் மோதல் வெடிக்கலாம். இதற்கிடையே, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மீது குற்றவியல் நடவடிக்கையை ரஷிய அரசு தொடங்கி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version