பாம்பனுக்கு அடுத்தே உள்ளே தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.
குறித்த 08 வயது மதிக்கத்தக்க கடல் பசுவை பிரேத பரிசோதனை செய்த பின்னர் கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் போன்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சமீபகாலமாக கடல் பசு, டொல்பின் போன்ற உயிரினங்கள் சிக்கி வருகிறது.
பின்னர், குறித்த உயிரினங்களை உடனடியாக கடற்றொழிலாளர்கள் கடலில் மீண்டும் விட்டு விடுகின்றனர்.
இந்தநிலையில், நேற்று பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில் கடற்பசு இறந்தநிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.