அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன #OceanGate_Titan என்ற நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன OceanGate_Titan நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பேரும் நீருக்கடியில் வெடித்துச் சிதறிய பேரழிவு சம்பவத்தில் இறந்தனர் என அமெரிக்கா கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நீர்மூழ்கி கப்பலின் வெடிப்பு இடிபாடுகள் ஒத்துப்போகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காணாமல் போன நீர்மூழ்கி கப்பலுக்கான பாரிய தேடுதலையும் முடிவைக் கொண்டு வந்தனர்.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவை களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.