Home Health& Fitness கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும் வல்லாரை சட்னி.

கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும் வல்லாரை சட்னி.

0

தேவையான பொருட்கள் : வல்லாரைக்கீரை – அரை கட்டு, தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல், – கால் கப், பச்சை மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.

குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version