முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின் டிவொக்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நாடாளுமன்றத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
நாடாளுமன்ற ஜனநாயகம், செயலாற்றுகை, முறைமையாக்கல் அபிவிருத்தி, மக்கள் பங்கேற்பு, ஜனநாயக ஆளுகை, நாடாளுமன்ற அலுவல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு, தொழிநுட்ப ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கொள்கை நிபுணரும் ஆட்சி முறைமை தொடர்பான பிரிவின் தலைவருமான சந்திரிகா கருணாரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.