Home World அட்லான்ட்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததாகச் சந்தேகம்.

அட்லான்ட்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததாகச் சந்தேகம்.

0

அட்லான்ட்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மாண்டதாக அமெரிக்கக் கடலோரக் காவற்படை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
கப்பல் உட்பகுதியில் வெடித்திருப்பதுபோல் தெரிவதாகக் கூறப்பட்டது.

தேடல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மாண்டவர்களின் குடும்பங்களுக்கு OceanGate Expeditions நிறுவனம் இரங்கல் தெரிவித்தது.

“மாண்ட பயணிகள் கடல்களை ஆராய்வதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்,”
என அது கூறியது.

அந்த ஐவரும் OceanGate Expeditions நிறுவனத்தின் Titan நீர்மூழ்கிக் கப்பலில் கடலடியில் இருக்கும் Titanic கப்பலைப் பார்க்கச் சென்றிருந்தனர்.

தேடல் பணியில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா இயந்திர மனிதக் கருவி ஒன்று நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்தது.

அட்லான்ட்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மரணம் – வெடித்ததாகச் சந்தேகம்

அட்லான்ட்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மாண்டதாக அமெரிக்கக் கடலோரக் காவற்படை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
கப்பல் உட்பகுதியில் வெடித்திருப்பதுபோல் தெரிவதாகக் கூறப்பட்டது.

தேடல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மாண்டவர்களின் குடும்பங்களுக்கு OceanGate Expeditions நிறுவனம் இரங்கல் தெரிவித்தது.

“மாண்ட பயணிகள் கடல்களை ஆராய்வதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்,”
என அது கூறியது.

அந்த ஐவரும் OceanGate Expeditions நிறுவனத்தின் Titan நீர்மூழ்கிக் கப்பலில் கடலடியில் இருக்கும் Titanic கப்பலைப் பார்க்கச் சென்றிருந்தனர்.

தேடல் பணியில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா இயந்திர மனிதக் கருவி ஒன்று நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்தது சிதைவுகள் சிதறிக்கிடப்பதை வைத்துப் பார்க்கும்போது நீர்மூழ்கிக் கப்பல் உட்பகுதியிலிருந்து வெடித்திருப்பதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட நீழ்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு ஒன்றே முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டது.

கப்பல் எப்போது செயல் இழந்தது என்பதை இப்போதைக்குச் சொல்லமுடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version