Home Srilanka படியில் இருந்து தவறி விழுந்துஇரண்டு வயது குழந்தை சாவு!

படியில் இருந்து தவறி விழுந்துஇரண்டு வயது குழந்தை சாவு!

0

படியில் இருந்து தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்தே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

மரணக் கிணற்றின் உரிமையாளரின் லொறிச் சாரதியின் குழந்தையே இவ்வாறு படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக மரணக் கிணற்றின் பாதுகாப்பு மற்றும் அலங்காரத்துக்காகக் குழந்தையின் தந்தை வந்திருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version