நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. நேற்று முன்தினம் 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 21 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.