அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று காவேரி மருத்துவமனையில் 5 மணிநேரம் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன்பின்னர் செந்தில் பாலாஜி டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரத்திற்கு பின் வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு, நீராகாரம் மூலம் உணவு வழங்கப்பட உள்ளது. தற்போது செந்தில் பாலாஜியின் இசிஜி, பல்ஸ் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதயத்தில் அடைப்பு அகற்றப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு இயல்பாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.