2023-24ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் ஐஸ்லாந்தின் ரெய்காவிக் நகரில் உள்ள லாகார்டால்ஸ்வல்லூர் மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் ஜெ. பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுக்கல் அணி ஐஸ்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. 38 வயதான போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது 200வது சர்வதேச போட்டியாகும். விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 2வது பாதியில் ஆட்டத்தின் 89வது நிமிடத்தில், ரொனால்டோ கோல் அடித்தார்.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது. ஜெ பிரிவில் ஆடி உள்ள 4 போட்டியிலும் வெற்றிபெற்ற போர்ச்சுக்கல் முதல் இடத்தில் நீடிக்கிறது. ரொனால்டா நேற்று அடித்தது சர்வதேச போட்டிகளில் அவரின் 123வது கோலாகும். இந்த பட்டியலில் அவர் முதல் இடத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 200வது சர்வதேச போட்டியில் ஆடும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்த அவருக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.