Home India Sports இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கும் உலக கோப்பை அட்டவணை ஜூன் 27ம் தேதி வெளியீடு.

இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கும் உலக கோப்பை அட்டவணை ஜூன் 27ம் தேதி வெளியீடு.

0

13வது உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம்தேதி முதல் நவம்பர் 19ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற 2 அணி தகுதிச்சுற்றில் இருந்து பங்கேற்க உள்ளது. வழக்கமாகஉலககோப்பை தொடருக்கான அட்டவணை 6 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படும். ஆனால் பாகிஸ்தான் இந்தியா வந்து ஆடுவதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் அட்டவணை காலதாமதமாகி வருகிறது.

வரைவு அட்டவணைக்கு பிசிபி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சுழலுக்கு சாதகமான சென்னையில் ஆப்கானிதானுடன், பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுடனும் பாகி்ஸ்தான் மோதும் வகையில் வரைவு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸி.க்கு எதிரான போட்டியை சென்னைக்கும், ஆப்கன் போட்டியை பெங்களூருக்கும் மாற்ற பிசிபி கோரிக்கை வைத்த நிலையில் பிசிசிஐ அதனை கண்டுகொள்ளவில்லை. வேறு வழியில்லாததால் பாகிஸ்தான் தற்போது ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் தொடர் ஆரம்பிக்கும் 100 நாட்களுக்கு முன்னதாக வரும் 27ம்தேதி அட்டவணையை வெளியிட ஐசிசி திட்டமிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version