இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன. 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது. இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில், டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இறங்கிய மார்னஸ் 13 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களும், ஸ்காட் போலாந்து 20 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 ரன்களும், கேமரூன் கிரின் 28 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் தொடக்கம் முதல் விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், அப்ரம் அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ஓவரில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் களத்தில் இருந்தனர். 87.3 ஓவரில் 15 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் இருவரும் விளையாடினர். இதில், பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும எடுத்தனர்.
இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.