நவக்கிரகங்களின் இளவரசன் புதன் இவர்களின் ராசி நாதன்.எல்லா விசயங்களை அறிந்து கொள்ள ஆர்வம்,உண்மையை பேசுதல்,புத்தி கூர்மை அதிகமாக இருக்கும்.
மிகுந்த ரசனை கொண்டவர்களாவும்,கவிதை,எழுத்தாற்றல் என எல்லா திறமைகளையும் கொண்டவர்கள்.
கொஞ்ச கூச்ச தன்மை கொண்டவர்கள்,ஆணாக இருந்தால் பெண் தன்மையும்,பெண்ணாக இருந்தால் தாய்மையுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதிகம் கோப படமாட்டார்கள் அப்படி கோபம் வந்தாலும் அடுத்தவர்களின் மனதை புண்படுத்தாமல் ஒதுங்கி போய் விடுவார்கள்.மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவர்கள்,அன்பு நிறைந்தவர்கள்,வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.
இள வயதில் ராகு திசாவை சந்திப்பதால் இளம் வயதில் மிகுந்த கஷ்டங்களையும்,நெருக்கடியும் தாண்டி வருவார்கள் அதேபோல் நல்ல அனுபவமிக்கவராகவும்,நிதானமானவராகவும் மாறிவிடுவிடுகிறார்கள்.
இசையை ரசிப்பவர்கள்,வசீகரமானவர்கள்,அழகு நிறைந்தவர்கள்.
வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் போராடி வருவதால் வெற்றியையும்,புகழையும் கண்டு ஆடமாட்டார்கள்!
இவர்களுக்கு வரும் தோல்வி பகலவனை மேகம் மறைப்பது போல்தான் ஆனால் இவர்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.