முதன்மை தலைமையாளரான சூரியன் ராசி நாதன்.ஒரு முடிவு எடுத்தால் உறுதியாக இருப்பார்கள்.மிகுந்த முன் கோபிகள் ஆனால் இரக்க மனமும்,கருணை உள்ளமும் கொண்டவர்கள்.
தாய்,தந்தையர்கள் மீது பாசம் கொண்டவர்கள்.எல்லோரையும் அரவணைத்து பொக நினைப்பார்கள்.
வைராக்கிய மனம் கொண்டவர்கள்.தான் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பார்கள்.அன்புக்கு மட்டும் அடிபணிவார்கள்.
தன்னை தைரியசாலியாக,துணிவு மிக்கவராக காட்டிக்கொண்டாலும் குழந்தை மனம் கொண்டவர்கள்.
தன்னை சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி கொள்வார்கள் அவ்வளவு சீக்கிரம் இவர்களை புரிந்து கொள்ள இயலாது.
எல்லாவற்றிற்கும் மேலாக தனித்திறமையாலும்,புத்திசாலித்தனத்தாலும் வெற்றி பெறாமல் விட மாட்டார்கள்.