ராசி நாதன் செவ்வாய்!மனசாட்சிக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்கள் வேறு எதற்கும் அஞ்சாத சிங்கம் போல் துணிச்சல் காரகர்கள்.
உடன் பிறந்தவர்களின் அன்பும்,பாசமும் கொண்டவர்கள் ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள்.
உடனே கோபப்படுவார்கள் அதே சீக்கிரம் சாந்தமும்,சமாதானமும் ஆகிவிடுவார்கள்.யாரையும் பகைத்துக்கொள்ளாமல் அனுசரித்து போக விரும்புவார்கள்.
அன்புக்கு அடிபணிந்தவர்கள் இவர்களிடம் அதிகாரம் செய்தால் சுயரூபத்தை காட்டி விடுவார்கள்.
இந்த ராசிக்காரர்களிடம் கிரகிக்கும் தன்மையும், கற்றுக்கொள்ளும் வேகமும் அதிகம் இருக்கும். வேலையிலும் வெகு சீக்கிரம் சாதனை படைப்பார்கள்.
பலநூறு பேருக்கு மத்தியில் வேலை செய்தாலும், சட்டென்று அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்கும் ஆற்றல் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.
அனைத்து துறைகளிலும் நாட்டம் இருக்கும்,கதை,கலை,கவிதை எல்லாத்திலும் திறமையை வளர்த்துகொள்ள நினைப்பார்கள்.
சூரியன்,குரு முழு ஆதரவை கொடுப்பார்கள்.இதனால் வாழ்வில் இடையூறுகள் வந்தாலும் வெற்றி பெறாமல் விடமாட்டார்கள்.