ராசி நாதன் சனி பகவான் ஆதலால் வைராக்கிய குணமும் நெஞ்சுர மனமும் கொண்டவர்.அதே ராசி நாதன் விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால் ஏகப்பட்ட சுப காரியங்களை முன்னின்று நடத்துவார்கள்!
இவர்களுக்கு புத்திரர்களால் மதிப்பு மரியாதை கிடைக்கும்.எங்கு சென்றாலும் செல்வாக்கும்,மதிப்பும் இருக்கும்.சபைதனில் தனித்து தெரிவார்கள்.மற்றவர்களுக்கு வலிய உதவக்கூடியவர்கள்.
இவர்கள் தொட்டதல்லாம் துலங்கும்.கோபம் வந்தால் மற்றவர்களை காயப்படுத்த தயங்க மாட்டார்கள்.மிகுந்த அறிவாளிகளாகவும்,புத்திசாலியாகவும் இருப்பார்கள்.
உதவி செய்து கெட்டப்பெயர் வாங்குவார்கள்.வசீகரமான அழகுடையவர்கள்.தான் எவ்வளவு வறுமைபட்டாலும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய உழைப்பில் முன்னேறுவார்கள்.அதிக நட்பு வட்டத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இளமையில் வயதுக்கு மீறிய ஞானமும்,பக்குவமும் கிடைத்து விடுவதால் தோல்வியை கண்டு துவளாமல் வெற்றி நடை போடுவார்கள்.