கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், தெற்கு கிரீசில் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.