மனதுக்காரகன் சந்திரன் இவர்களின் ராசிநாதன்.
நல்ல மனம் கொண்டவர்கள்,எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள்.அன்புக்கும்,நியாயத்திற்கு மட்டுமே கட்டுப்படுபவர்கள்.
அரசியல் தலைவர்கள்,ஞானிகள்,மகான்கள் இந்த ராசியாக இருப்பார்கள்.
சந்திரனும்,செவ்வாயும் முழு ஆதரவை கொடுப்பார்கள்.எந்த அளவுக்கு அன்பான குணமாக இருப்பார்களோ அந்த அளவுக்கு மன வலிமை கொண்டவர்கள்.
எதிலும்,எங்கும் முதன்மையானவர்களாக தெரிவார்கள்.வாழ்வில் எவ்வளவு கஷ்டங்களையும்,போராட்டங்களையும் சந்தித்தாலும் தன் பக்குவமான மனதாலும்,நிதானமான செயல்பாட்டாலும் வெற்றி வாகை சூடுவார்கள்.