ராசி நாதன் புதன் எதையும் அறிவாற்றலால் சாதிக்கக்கூடியவர்கள்.தன்னுடைய திறமையையும்,அறிவாற்றலையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
யாருக்குமு பக்க சார்பாக பேசாமல் நியாயத்தை மட்டும் பேசுவார்கள்.யாரிடமும் உதவி கேட்க அவ்வளவு தயங்குவார்கள்.”எதுவும் நினைப்பார்களோ”என்று உரிமையானவர்களிடம் கூட உதவி கேட்க மாட்டார்கள்.
நீதி வழங்குவதில் வல்லவர்கள்.முன் கோபம் கொண்டவர்கள்.சோம்பேறித்தனத்தால் வேலைகளை தள்ளிப்போடுவார்கள்.
வாழ்வில் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்.யதார்த்தமானவர்கள்.மென்மை குணம் கொண்டவர்கள்.இசைப்பிரியர்கள்.
ராசி நாதன் புதனுக்கு,சுக்கிரறும் வேண்டிய உதவிகள் செய்வதால் ஏதாவது ஒரு துறையில் சாதிக்காமல் விடமாட்டார்கள்.