ராசி நாதன் சுக்கிரன்.முக வசியம் உடையவர்கள்!எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.அடுத்தவர்கள் மனம் புண்படக்கூடாது என நினைப்பார்கள்.மனிதநேயம் கொண்டவர்கள்.
பார்க்க சாது போல இருந்தாலும் இவர்களை எதிர்த்து யாரும் வெல்ல முடியாது.ராசியில் சந்திரன் உச்சம் பெற்றவர்கள் இதனால் மனதுக்குள் எவ்வளவு கவலை இருந்தாலும் மற்றவர்களிடம் கலகலப்பாக பேசுவார்கள்.
இவர்களுக்கு ஒருவரை பிடித்தால் கோபுரத்தில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்!அவர்கள் இவர்களை மதிக்கவில்லை என்றால் அவர்களை புறக்கணித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
தன்னுடன் நண்பர்கள் அடுத்தவர்களிடம் நெருங்கி உறவாடினால் இவர்களுக்கு பிடிக்காது!அடுத்தவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணிக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களை நன்றாக கணிக்கக்கூடியவர்கள்.பொது காரியங்களில் முன்னின்று செயல்படுவார்கள்.
ராசியில் உச்சம் பெற்ற சந்திரன்,ராசி சுக்கிரன் இவர்களோடு புதனும்,சனியும் சேர்ந்து உதவி செய்வாதால் முற்பகுதி வாழ்வில் கடுமையான சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.