வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
42 வயதான குறித்த பெண், வீட்டில் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளைக் களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.