அரசாங்கத்தை நடத்திச் செல்ல மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவை பெற்று தராவிட்டால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க மொட்டு தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
மோசமான நிலையில் இருந்த நாடு சற்று உயர்ந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் , அவர்களது ஆதரவு தேவை என தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு கடந்த முறை மொட்டு மாவட்ட தலைவர்கள் பலர் கலந்து கொள்ளாத போது தெரிவிக்கப்பட்டது.
எனினும், இரண்டாவது நாள் மாநாட்டிற்குப் பின், அரசுக் கட்சித் தலைவர்களை அழைத்து ஜனாதிபதி பேசிய போது , அனைவரும் அரசுக்கு தங்களால் ஆன முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக உறுதியளித்தனர்.