தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமாகத்
திகழ்ந்து வரும் ‘கரகாட்டக்காரன்’ படம்
திரைக்கு வந்து இன்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகிறது.
கரகம், காதல், வாழைப்பழக்காமெடி,
சொப்பன சுந்தரியின் கார், சென்டிமென்ட் என இன்றுவரை சினிமாப் பிரியர்கள் கொண்டாடும் இயக்குனர் கங்கை அமரனின் அட்டகாசமான
இப் படைப்புக்கு இசைஞானி இளையராஜாவின் இசையும், பாடல்களும் மகுடம் சூட்டியது போல்
இருந்தமை குறிப்பிடத்தக்கது.