Home World பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு.

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு.

0

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பெலாரஸ் நாட்டுக்கு ரஷியா அனுப்பி வைத்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது.

கடந்த வாரம் இந்த போரின் ஒரு பகுதியாக, ரஷியாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைனின் படைகள் பெரிய அளவில் போரில் ஈடுபட தொடங்கின. இந்த நிலையில், உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷியா அனுப்ப முடிவு செய்தது.

இதுபற்றி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்த வாரம் கூறும்போது, ரஷியாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்து உள்ளது. ஒரு தடுப்பு நடவடிக்கைக்காகவே இவை குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். இந்த தகவலை தி ஹில் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு அரசு ஊடகங்களுக்கு லுகாஷென்கோ அளித்த பேட்டியில், ரஷியாவிடம் இருந்து பெற்ற ஏவுகணைகளையும் மற்றும் வெடிகுண்டுகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இந்த வெடிகுண்டுகள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை என கூறியுள்ளார் என பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version