கம்பஹா தொம்பே – கிரிதர – தெல்கொட பிரதேசத்தில் கடற்படைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
பாரவூர்தியில் பயணித்த 39 மற்றும் 46 வயது மதிக்கத்தக்க இருவரே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் ராகமை போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடற்படை பஸ் கிரிந்திவெல பகுதியில் இருந்து கடற்படை முகாம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.